இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு ஜனாதிபதி செயலகம் தர வேண்டிய ஒரு கோடி ரூபாய் கட்டணத்தைக் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளது குறித்த நிறுவனம்.
2014ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் பெற்ற பொருட்களுக்கான கட்டணங்களே அவையெனவும் அதனைச் செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் இன்னும் செலுத்தப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம், அன்றாட நிர்வாக செலவுகளுக்காக வகை தொகையின்றி பணம் அச்சிட்டு, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் தற்சமயம் வெளிநாட்டுக் கடன்களை நம்பி ஆட்சியைக் கொண்டு நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment