வெளிநாட்டு பிரஜையான டயானா கமகே, இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா 2015ம் ஆண்டே முடிந்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
டயானாவுக்கு இரட்டைக்குடியுரிமை உள்ளதா? என்ற விசாரணை இடம்பெற்று வரும் அதேவேளை, அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கீதா குமாரசிங்கவும் இவ்வாறு சிக்கலுக்கு முகங்கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டிருந்தமையும், பசில் ராஜபக்சவும் இரட்டைக் குடியுரிமையுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment