நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட QR கோட் முறைமை, டிசம்பர் முதல் நீக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர.
எரிபொருள் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வரும் வரை இம்முறைமை தொடரவுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ச்சியாக அரசு சலுகைகளை எதிர்பார்த்து, வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment