2017ம் ஆண்டு, பொலிசாரின் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து அக்காலப் பகுதியில் இனவாத வன்முறைத் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஞானசாரவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சாட்சிக்காரர்கள் (பொலிஸ்) தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்கு வராத நிலையில் ஞானசார விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஞானசாரவின் விகாரைக்கு முன்பாக பொலிசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததன் பின்னணியில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமையும் அக்காலப் பகுதியில் பௌத்த துறவிகளுக்கு எதிராக நல்லாட்சி அரசு செயற்படுவதாக பெரமுனவினர் பிரச்சாரம் செய்து வந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment