சண்டைக் காரனையும் கட்டிப்பிடிப்பேன்: ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Sunday, 20 November 2022

சண்டைக் காரனையும் கட்டிப்பிடிப்பேன்: ஹிருனிகா

 



பொலிசார் தமது கடமையைச் செய்யும் போது ஹிருனிகா அவர்களைக் கட்டிப்பிடிப்பதன் ஊடாக இடையூறு விளைவிப்பதாக பிரச்சாரம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார் ஹிருனிகா.


தாம் பொலிசாரைக் கட்டிப்பிடித்து, நீங்கள் சீருடையில் இருப்பதால் பேச முடியாத பிரச்சினைகளையே நாங்கள் உங்களுக்காகவும் சேர்த்துப் பேசுகிறோம் என மட்டுமே சொல்வதாகவும், அடிக்க வரும் சண்டைக்காரனைக் கூட கட்டிப்பிடித்து அன்பைப் பகிர்ந்தால் கோபம் தணிந்து விடும் எனவும் விளக்கமளித்துள்ளார்.


தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஹிருனிகாவுக்கு எதிரான பாரிய அளவிலான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment