சஜித் மக்களிடம் 'அடி' வாங்கப் போகிறார்: டயானா - sonakar.com

Post Top Ad

Monday, 28 November 2022

சஜித் மக்களிடம் 'அடி' வாங்கப் போகிறார்: டயானா

 



நாட்டை சீர்படுத்தும் நடவடிக்கைகளை குழப்பி வரும் சஜித் பிரேமதாச, பல்வேறு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும், உண்மை புரியும் போது மக்களே அவரை அடித்து விரட்டும் சூழ்நிலை உருவாகப் போகிறது எனவும் எச்சரித்துள்ளார் டயானா கமகே.


டயானா - சஜித் முறுகல் வலுத்துள்ள நிலையில், டயானாவின் இரட்டைக் குடியுரிமை வழக்கும் சூடுபிடித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி டயானாவின் குடியுரிமை பற்றிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் தலை தூக்குவதை சஜித் பிரேமதாசவே குழப்பி வருவதாக டயானா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment