கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணங்கள் அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 14 November 2022

கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணங்கள் அதிகரிப்பு

 



கடவுச்சீட்டு மற்றும் இலங்கைக்கான விசா கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க.


2023ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலேயே அவர் இதனை முன் மொழிந்துள்ள அதேவேளை அரசின் வரவு - செலவுத்திட்டம் தோல்வியடையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.


ஏலவே பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் சஜித் தலைமையிலான எதிரணிக் கூட்டணியில் இன்று இணைந்துள்ளமையும் பசில் தரப்பினர் கோரிய மேலதிக பத்து அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத காரணத்தினால் ஆளுங்கட்சிக்குள் பிளவு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment