தேசியப் பட்டியல் ஊடாக தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராகி, இன்று நாட்டின் ஜனாதிபதியா அதிகாரத்தில் வீற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் திங்கள் (14) நிதியமைச்சராக, அரசின் வரவு - செலவுத் திட்டத்தை முன் வைக்கவுள்ளார்.
இந்நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் சபாநாயகர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு, விசேட வாகன சேவையைப் பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment