இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியொன்று இருப்பதாகவும், குறித்த சக்தியின் உள்நாட்டு முகவர்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இச்சக்தியே நாட்டில் வன்முறை மற்றும் போராட்டங்களைத் தூண்டி விட்டதாகவும் நாடாளுமன்றில் வைத்து அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய வரவு - செலவுத் திட்டம் காலத்துக்கேற்ற சிறந்த திட்டம் எனவும் தெரிவித்துள்ள அவர், முன்னர் பதவி வகித்த அரசின் கடன் சுமைகளை தமது அரசாங்கம் சுமக்க நேரிட்டதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment