வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே பொதுவான இணக்கப்பாடு இல்லாத சூழ்நிலையில் அமெரிக்காவிலிருந்து பசில் ராஜபக்ச வரவழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பு வந்த அவருக்கு பெரமுனவினர் 'வரிசையில்' நின்று அமோக வரவேற்பளித்துள்ளதுடன் அவரது வருகை ஊடாக மூன்றிலிரண்டு பெரும்பாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிடம் மேலதிகமாக பத்து அமைச்சு பதவிகளை 'பேரமாக' முன் வைத்திருந்த பசில் ராஜபக்சவின் வரவு, பட்ஜட்டின் பின்னரான அமைச்சரவை மாற்றங்களுக்கும் வழி வகுத்துள்ளதாக ஊகங்கள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment