பட்ஜட் கட்சித் தாவல்கள் - இரு பக்கமும் பரபரப்பு - sonakar.com

Post Top Ad

Monday 14 November 2022

பட்ஜட் கட்சித் தாவல்கள் - இரு பக்கமும் பரபரப்பு

 



வரவு - செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில் பெரமுன தரப்பின் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் இன்று எதிர்க்கட்சியுடன் கை கோர்த்துள்ளனர்.


அநுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே, சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் இவ்வாறு சஜித் தலைமையிலான எதிரணிக் கூட்டணியில் இணைந்துள்ள அதேவேளை ராஜித மறு பக்கம் தாவவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை நிராகரித்து செயற்பட்ட ஹரின் மற்றும் மனுஷ முக்கிய கால கட்டத்தில் ரணிலுடன் கை கோர்த்திருந்த அதேவேளை அண்மைக்காலமாக சஜித்தின் செயற்பாடுகளில் ராஜித அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment