அரசாங்கம் விரைவில் கவிழும் என ஆரூடம் வெளியிட்டுள்ளார் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க.
2020ல் இருந்து இதுவரை நிலையான ஆட்சியில்லாத நிலையில் இலங்கையில் பொருளாதாரம் வெகுவாக நலிவடைந்துள்ளது. தற்சமயம் பெரமுன பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக உள்ளார்.
எனினும், பெரமுனவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் நாடாளுமன்றைக் கலைப்பதற்கான தனது அதிகாரத்தை ரணில் பயன்படுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment