புனர்வாழ்வு என்கிற பேரில் சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்கு ஏதுவாக நாமல் ராஜபக்சவினால் முன் வைக்கப்பட்டுள்ள உத்தேச சட்ட வரைபினை மீளப்பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பு மையம்.
இதற்கு முன் புனர்வாழ்வு எனும் போர்வையில் காலவரையறையற்ற தடுத்து வைப்பு, சித்திரவதை போன்ற விடயங்கள் ஏராளமாக இடம்பெற்றுள் நாட்டில், இப்போதைய முன்னகர்வும் மோசமான விளைவுகளின் ஆரம்பம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினரை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டோரை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்றும் அரசியல் மட்டத்தில் கருத்து வெளியிடப்பட்டு வரும் நிலையில் மனித உரிமை அமைப்புகள் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment