தமது கட்சிக்காரர்கள் எல்லாம் பதவி வெறி பிடித்து தாவி விட்டதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பெரமுன அதிருப்தியாளர்கள் மற்றும் அரச எதிர்ப்பு குழுக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், கட்சி மட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பதவிகளைப் பறித்துள்ளதாகவும் சு.க உப தலைவர் ரோஹன லக்ஷமன் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், புதிய உத்வேத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இயங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment