ஹர்ஷவுக்கு பதிலாக சரித: கோப் குழுவில் மாற்றம் - sonakar.com

Post Top Ad

Tuesday 18 October 2022

ஹர்ஷவுக்கு பதிலாக சரித: கோப் குழுவில் மாற்றம்

 



புதிதாக அமைக்கப்பட்ட கோப் குழுவின் சரித ஹேரத் உள்ளடக்கப்படாதமை குறித்து ஜனாதிபதியையும் பிரதமரையும் கடுமையாக சாடி வந்த நிலையில் மீண்டும் கோப் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் சரித ஹேரத்.

அவருக்கு வழி விடும் வகையில் ஹர்ஷ டி சில்வா விலகிக் கொண்டுள்ள நிலையில் இது சாத்தியமாகியுள்ளது.


தான் இல்லாத கோப் குழுவை கள்வர்களும் - கொள்ளையர்களும் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக சரித முன்னர் தெரிவித்திருந்தமையும் இப்போது அவரும் 27 பேர் கொண்ட குறித்த குழுவில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment