'நரக நெருப்பு' (Hell fire) எனும் பெயரில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய இசை நிகழ்ச்சிக்கு அனுமதியளித்து விட்டு, பின்னர் அதன் பெயரை மாற்ற நிர்ப்பந்தித்ததாகவும் இவ்வாறான நடவடிக்கைகளால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாகவும் மேயர் ரோசி மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார் டயானா கமகே.
சமயம் என்பது மனித உரிமை என்றாலும் அதனை நாட்டின் அபிவிருத்தியோடு குழப்பிக் கொள்வதாகவும் இவற்றை வெ வ்வேறாகப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற டயானா, கலாச்சாரம் என்கிற பெயரில் நாட்டின் அபிவிருத்தியை தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடமை எனவும் அதனைத் தாம் திட்டமிட்டபடி முன்னேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கினற அவர், இசை நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு தான் விபச்சாரத்தை அனுமதிக்கக் கோரிய நபர் என்ற தனிப்பட்ட தாக்குதல்களையும் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment