தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியால் எவ்வித பிரயோசனமும் இல்லையென தெரிவித்துள்ள டயானா, அதிகாரமில்லாத பதவியைக் கைவிட யோசிப்பதாக தெரிவிக்கிறார்.
சுற்றுலாத்துறையை முன்னேற்ற பல 'இரவு' நேர திட்டங்களை முன் வைத்து உணர்வு ரீதியான எதிர்ப்புகளை சந்தித்து வரும் டயானா, தற்போது தனக்கான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லையென தெரிவிக்கிறார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தாலும் இரவு 10 மணியுடன் கதவை மூடி உறங்க வேண்டியுள்ளதாகவும் இரவில் செலவு செய்ய தயாராக இருந்தும் அதற்கான போதிய இடங்களும் சேவைகளும் இல்லையெனவும் டயானா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment