மஹிந்த ராஜபக்சவை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து மோதல் வெகுவாக வலுப் பெற்று வருவதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் மீண்டும் தலையெடுத்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஒரு அணியும், செயலாளர் சாகர காரியவசம் ஆதரவாக செயற்படும் அணியும், மேலதிகமாக இரு பக்கமும் அணி சேராத சிரேஷ்ட உறுப்பினர்களின் அணியுமாக மூன்று அணிகள் தற்போது காணப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
22ம் திருத்தச் சட்டத்தை சாகர அணி எதிர்க்க முனைகின்ற அதேவேளை அதன் பின்னணியில் பசில் ராஜபக்ச இருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment