இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மீண்டும் நெருக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளது இலங்கை.
பல அபிவிருத்தியடைந்த நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக முன் வைத்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் வெளிநாடுகளில் விசாரணை அல்லது வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்ப்பதற்கு இலங்கை அரச குழு கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
எனினும், பலமான நாடுகளுடன் மோத முடியாத சூழ்நிலை நிலவுவதாக அலி சப்ரி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment