இலங்கையை கஞ்சா உற்பத்தி நாடாகவும், இரவு நேர கேளிக்கைகள் அதிகம் உள்ள நாடாகவும் மாற்றியே ஆக வேண்டும் என்று திடமாக கருத்துரைத்து வரும் டயானா கமகேவுக்கு எதிரான கடவுச்சீட்டு முறைப்பாடு தொடர்பில் சி.ஐ.டி விசாரணை அறிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்.
போலியான தகவல்களை வழங்கி அதனூடாக இலங்கைக் கடவுச் சீட்டைப் பெற்றுள்ளதாக டயானாவுக்கு எதிராக முறைப்பாடு பதிவாகியுள்ளது. முன்னதாக அவர் ஐக்கிய இராச்சிய பிரஜாவுரிமை உள்ளவர் என்ற குற்றச்சாட்டு வலுவாக முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் விசாரணை அறிக்கை கோரியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 10ம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment