சட்டக் கல்லூரி பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரமே நடாத்த வேண்டும் என்ற தீர்மானத்தில் அரசு திடமாக இருப்பதாக தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.
மாணவர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவும் அதேவேளை எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பில் நாடாளுமன்றில் வினவப்பட்ட போதே விஜேதாச இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
எனினும், பிரதம நீதியரசருடனும் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் 1957ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த அரசு இலங்கையில் ஆங்கில மொழி கல்வியை சிதைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment