பங்களதேஷிடம் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை திருப்பித் தரும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது பங்களதேஷ்.
பங்களதேஷ் மத்திய வங்கியிடமிருந்து நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி பெற்றிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இரு தடவைகள் மேலதிக கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 2023 மார்ச் மாதம் இலங்கை குறித்த கடனை மீளச் செலுத்தும் என பங்களதேஷ் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment