கோட்டா அரசு மிகவும் சிரமப்பட்டுக் கட்டியெழுப்பிய பொருளாதாரம் 'அரகல' காரர்களால் தான் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்து, மக்கள் அன்றாட வாழ்வினைக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையிலேயே போராட்டங்கள் வெடித்திருந்தது. எனினும், பொருளாதாரம் அவ்வேளையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்ததாக பிரசன்ன விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், பொருளாதார சீரழிவுக்கு போராட்டக்காரர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment