19ம் திருத்தச் சட்டம் நாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்தியதாகக் கூறி 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்ட பொதுஜன பெரமுன, மீண்டும் 19ஐக் கொண்டு வரும் வகையிலான 22ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது கௌரவ பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் பெரமுன செயலாளர் சாகர காரியவசம்.
இப்பின்னணியில் பெரமுன தரப்பில் 22ஐ வெற்றி பெறச் செய்வதில் தயக்கம் நிலவுவதாகவும், அதிருப்தி நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவினர் எதிர்பார்த்த மேலதிக அமைச்சுப் பதவிகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் பசில் தரப்பு குழப்பங்களை ஏற்படுத்துவதாக சிவில் அமைப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment