22ம் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதம் அடுத்த வாரமே இடம்பெறும் என அறிவித்துள்ளார் சபாநாயகர்.
குறித்த திருத்தச் சட்டத்தினை தோற்கடிப்பதற்கு எதிரணிகள் முயன்று வருகின்ற நிலையில், ஆளுங்கட்சி அதிருப்தியணியும் இதனை அரசியல் இலாபம் பார்க்கும் சந்தர்ப்பமாக மாற்ற முயன்று வருகிறது.
இப்பின்னணியில், பெரமுன தரப்பினை திருப்திப் படுத்த மேலும் கபினட் அமைச்சுப் பதவிகளை ரணில் வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் நிலவுகின்ற அதேவேளை, சஜித் அணியினர் சிதறிக் கிடக்கும் எதிரணியினரை கருத்து ரீதியாக ஒன்றிணைய வைக்க முயன்று வருகின்றனர்.
ஆயினும், இவ்வாரம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டடிருந்த விவாதத்தினை முன்னெடுக்க இரு தரப்பும் தடைகளை ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியில், அடுத்த வாரம் விவாதத்தை நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment