மேலும் 10 கபினட் அமைச்சுப் பதவிகளுக்காக பெரமுனவினர் காத்திருக்கின்றனர். இன்றைய தினம் நியமனங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, அமைச்சரவை விஸ்தரிப்பில் ரணில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயினும், பெரமுன ஆதரவிலேயே ரணில் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளமையும் ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்களுக்கு மாற்று வழிகளில் சில பதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏலவே மொத்தமாக ராஜாங்க அமைச்சு பதவிகளை அள்ளி வழங்கியிருந்தமையும், இலங்கை தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தும் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment