நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகத் திகழ்ந்து, கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவு இன்று நினைவு கூறப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
இச்சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment