கடந்த வாரம் காலமான ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபத் மகாராணியாரின் துயர் பகிர கொழும்பிலுள்ள தூதரகத்துக்கு இன்று நேரடியாக விஜயம் செய்துள்ளார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
தமது இரங்கல் செய்தியையும் அவர் அங்கு பதிவு செய்துள்ள அதேவேளை பொதுநலவாய உறுப்புரிமை கொண்ட நாடு என்ற அடிப்படையில் 19ம் திகதி இலங்கையிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வார இறுதியில் ஜனாதிபதி ரணிலும் தூதரகம் சென்றிருந்த அதேவேளை இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள லண்டன் செல்லவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment