ரணில் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்காத மேலும் சில பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியோடு இணையவுள்ளதாக தெரிவிக்கிறது சமகி ஜன பல வேகய.
ஏலவே பீரிஸ் - டலஸ் குழு இவ்வாறு எதிர்க்கட்சியாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் இன்னும் சிலர் விரைவில் இணையவுள்ளதாகவும் இதன் பின்னணியில் ஆளுங்கட்சியின் பெரும்பான்மைப் பலம் இல்லாது போகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற பெரும்பான்மை 110 ஆக குறையும் என எதிர்வு கூறப்படுகின்றமையும், ரணில் முன் வைத்த இடைக்காட பட்ஜட்டுக்கு 115 பேர் ஆதரவளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment