தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப, உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து சூழ்நிலையும் சாதகமாக இருப்பதாக தெரிவிக்கிறது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.
இப்பின்னணியில், தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்துள்ள கட்சியின் பிரதிநிதிகள், உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதற்கு வழி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் தலையீடின்றி தேர்தலை அறிவிப்பதற்குத் தேவையான அவகாச காலம் தாண்டி விட்டதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment