கலகக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: நாமல் - sonakar.com

Post Top Ad

Thursday, 8 September 2022

கலகக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: நாமல்

 



மே 9 வன்முறையின் பின்னணியில் அரசியல்வாதிகளின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டு, அரசியல் பிரமுகர் ஒருவரின் உயிரும் பறிக்கப்பட்ட கலகங்களின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.


காலிமுகத்திடலில் இறுதி வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நடிகை தமிதா கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றில் உரையாடப்பட்ட போதே நாமல் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


எனினும், போராட்டக்காரர்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் கைதுகள் அரச பயங்கரவாதம் எனவும் இவை மனித உரிமை மீறல்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment