தம்மைத் தாமே அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது வட கொரியா. சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் நெருக்கடிகளையும் தாண்டி, பல்வேறு அணு ஆயுத பரிசோதனைகளை நடாத்தி வந்த நிலையில் தம்மை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தும் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது அந்நாட்டின் நிர்வாகம்.
இம்முடிவை எக்காரணம் கொண்டும் மாற்றப் போவதில்லையெனவும், தேவையேற்படின் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு முன்கூட்டியே அணு ஆயுத தாக்குதலை நடாத்துவதற்கும் முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலையடுத்து பிராந்திய - பூகோள வல்லாதிக்க நிலைமைகள் மாறி வரும் நிலையில் வடகொரியா இந்நகர்வை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment