கோட்டாபயவின் 'பெயரை' மனுவில் இணைக்க அனுமதி - sonakar.com

Post Top Ad

Friday 9 September 2022

கோட்டாபயவின் 'பெயரை' மனுவில் இணைக்க அனுமதி

 



திருகோணமலை எண்ணை தாங்கி ஒப்பந்த முறைகேடு, அதன் பின்னணியிலான அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரை நேரடியாக இணைக்க அனுமதி வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்த்த காலத்தில் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழ்நிலையில், அவரை நேரடியாக பிரதிவாதியாக இணைப்பதற்குத் தடையிருந்தது. எனினும், தற்போது அவர் ஜனாதிபதி பதவியில் இல்லையென்பதால் அவரது பெயரை நேரடியாக இணைக்க அனுமதி கோரப்பட்டிருந்தது.


இதனடிப்படையில் மனு மீண்டும் திருத்தம் செய்யப்படுவதற்கும், பிரதிவாதிகள் ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை  எண்ணை தாங்கிகளை லங்கா இந்தியன் எண்ணைக் கூட்டுத்தபானத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எதிர்த்தே இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment