ராஜபக்சக்களே 'இன்னும்' ராஜாக்கள்: சாகர - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 September 2022

demo-image

ராஜபக்சக்களே 'இன்னும்' ராஜாக்கள்: சாகர

 

NcgkW1x


இலங்கையின் அரசியல் பலம் இன்றும் ராஜபக்ச குடும்பத்திடமே உள்ளதெனவும் மக்கள் தொடர்ந்தும் அதனையே விரும்புகிறார்கள் எனவும் தெரிவிக்கிறார் பொதுஜன பெரமுன செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்.


ராஜபக்சக்கள் இல்லாமல் இலங்கை அரசியல் இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், கோட்டாபயவை ஜனாதிபதியாக்க வாக்களித்த 69 லட்சம் மக்களில் 68 லட்சம் பேர் இன்னும் ராஜபக்ச அரசொன்று அமைவதையே விரும்புவதாகவும் கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.


ஒரு லட்சம் பேருக்கு கோட்டாபய வெறுத்துப் போனதற்காக அது ஒட்டு மொத்த மக்களின் விருப்பில்லையெனவும் சாகர விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment