மக்கள் ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பை வெளியிட அனுமதியிருக்கின்ற போதிலும் அது சட்ட - ஒழுங்கைக் குழப்பாத வகையில் அமைய வேண்டும் என்பதால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஆகக்குறைந்தது ஆறு மணித்தியாலங்களுக்கு முன்பாக பொலிஸ அனுமதி பெற்ற பின்னரே ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியும் என தெரிவிக்கிறார் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்.
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து அதனூடாக பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளை இனியும் அரசாங்கம் அனுமதிக்காது எனவும் மே 9 சம்பவங்களை மீளவும் நிகழ அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதும் மக்கள் பாதுகாப்புக்காக எனவும், மக்கள் நடமாட்டம் அப்பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவிக்கின்றமையும் இவ்வறிவிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் வழக்குப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment