பிறந்து ஏழே நாள் குழந்தையை விற்ற பெண் கைது - sonakar.com

Post Top Ad

Monday 26 September 2022

பிறந்து ஏழே நாள் குழந்தையை விற்ற பெண் கைது

  



பிறந்து ஏழே தினங்களான நிலையில் தனது கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த 21 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.


கெபிட்டிகொல்லாவ பகுதியில் தற்காலிக குடில் ஒன்றில் 40 வயது நபருடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு பிறந்த குழந்தையை வஹல்கட பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்க்கு, அங்கு பணியாற்றும் தாதியும் கணவரும் இதற்கு உதவியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, இச்சம்பவத்தில் வைத்தியசாலை பணியாளர்கள் இருவருடன் ஆசிரியர்கள் இருவரும் தொடர்பு பட்டிருப்பதாகவும் ஏலவே 1.5 வயது குழந்தையுள்ள நிலையில் பொருளாதார சூழ்நிலையாலேயே இவ்வாறு குழந்தையை விற்றதாக தாய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment