நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க சீதா அரம்பேபொல முன் வந்துள்ள நிலையில், அதனூடாக அவரை பிரதமராக்க வழி செய்யப்படும் என்ற ஊகம் பரவி வருகிறது.
எனினும், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை இடம்பெறவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் ருவன் விளக்கமளித்துள்ளார்.
முதலில், தாம் அரசியலுக்குத் திரும்புவது தொடர்பில் இன்னும் கோட்டாபய ராஜபக்ச தீர்மானிக்கவில்லையெனவும், பெரமுன தரப்பிலிருந்து அவ்வாறு எந்த பேச்சும் இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment