கோட்டாபய ராஜபக்ச வீழ்ச்சியின் பின்னர் பல்வேறு புதிய கட்சிகள் உருவாகி வரும் பின்னணியில் விமல் - கம்மன்பில மற்றும் பழைய பங்காளிகளும் இணைந்து 'மேலவை இலங்கைக் கூட்டணி' என்ற பெயரில் புதிய கூட்டணியொன்றை அறிவித்துள்ளனர்.
இதற்கான விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய கம்மன்பில, நாடு தீப்பற்றி எரிவதாகவும் அதனை அணைக்க அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
2012ல், 1915 வன்முறையின் நூற்றாண்டு தவிர்க்க முடியாதது என்ற நச்சு விதையை விதைத்து, இனப் பிரிவினைகளை வளர்ப்பதில் கம்மன்பில முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment