மேலும் 12 கபினட் அமைச்சு பதவி நியமனங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் ஒன்றை நாமல் ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என பெரமுன தரப்பில் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மைய ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் வெற்றிக்கும் நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது முன்னெடுத்த நடவடிக்கைகளே காரணம் எனவும் பெரமுன தரப்பில் வியாக்கியானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்று தனது சம்பிரதாயபூர்வ நிராகரிப்பை நாமல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment