மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினரிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள தீவிரமான நடவடிக்கைகளை 'கபுட்டா' மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
சர்வகட்சி அரசுக்கு இணக்கம் வெளியிட்டுள்ள போதிலும், பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை விஸ்தரிப்பை கை விடுமாறு சமகி ஜன பல வேகய தெரிவிக்கிறது. எனினும், கபினட் அமைச்சுக்கு சமமான அதிகாரத்துடன் 40 இராஜாங்க அமைச்சு தரப்பட வேண்டும் என பசில் ராஜபக்ச அணி ஜனாதிபதியை வலியுறுத்தி வருகிறது.
இச்சூழ்நிலையில், ஜனாதிபதி செய்வதறியாது திகைப்பதாகவும் கபுட்டாவின் பிடியின் சிக்கியுள்ளதாகவும் சஜித் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment