2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சொகா மல்லியென அறியப்படும் பிறேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜுலை மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்த போதிலும் இவ்வருடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை இரத்துச் செய்திருந்தது.
தற்போது பிறேமலால் ரணில் தலைமையிலான அரசின் 38வது இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment