இராஜாங்க அமைச்சுப் பதவிகளை அள்ளி வழங்கிய ஜனாதிபதி, அடுத்ததாக மேலும் 12 முதல் 14 அமைச்சுப் பதவிகளை உடனடியாக வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளார்.
இப்பின்னணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்படக் கூடும் என அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பங்காளிக் கட்சிகளுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரமுன ஆதரவிலேயே ஜனாதிபதியாகியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment