இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகவும் வெளிநாட்டில் பணியாற்றும் நபர்கள் பணம் அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சரத் பொன்சேகா.
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அன்னிய செலவாணி அவசியப்படும் வேளையில், நடைமுறை அரசு சொந்த மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளதாக பொன்சேகா தெரிவிக்கிறார்.
ஆர்ப்பட்டக்காரர்கள் கைதின் பின்னணியிலேயே இவ்வாறு தெரிவிக்கும் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாகக் கடமையாற்றிய காலத்தில், கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியெடுக்கப்படுவதாகவும் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகவும் அப்போது தமிழ் சமூகம் சர்வதேச மட்டத்தில் முறையிட்டு வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment