ஜெயராஜ் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் விடுதலை - sonakar.com

Post Top Ad

Thursday, 1 September 2022

ஜெயராஜ் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் விடுதலை

 



முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே கொலை வழக்கின் சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


முன்னாள் கம்பஹா பொலிஸ் எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


ஜெயராஜ் மீதான தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்ட பின்னணியில் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறித்த சம்பவத்தில் ஜெயராஜுடன் 15 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment