ஐந்து வருட காலத்துக்கு, கடன் அடிப்படையில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருள் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நசீர் அஹமது.
தனது பல்கலைக்கழக தோழர்களே சவுதி - கட்டார் போன்ற நாடுகளின் முக்கியஸ்தர்கள் என தெரிவித்து, அதனூடாக நாட்டுக்கு எரிபொருளைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையூட்டி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்ட நசீர் அஹமது, தற்போது ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறார்.
பெற்றோலிய துறையை நவீனப்படுத்துவதற்கான செயற்திட்டத்திலும் சவுதியை தொடர்புபடுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment