நடைமுறை அரசின் பொருளாதாரக் கொள்கையை ஆதரித்து நான்கு வருட முதிர்வின் அடிப்படையில் 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட இணக்கத்தை வெளியிட்டுள்ளது.
பணிக்குழாம் மட்டத்திலேயே இவ்விணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளை, இத்தொகை இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு போதுமானதில்லையென எதிர்க்கட்சியினர் விசனம் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
760 மில்லியன் டொலர் கையிருப்புடன் வழங்கப்பட்ட அரசை 20 மில்லியனாக வீழ்ச்சியடையச் செய்த ராஜபக்ச நிர்வாகத்தின் போது, பொருளாதாரக் கொள்கைகள் எதுவும் இருக்கவில்லையென தெரிவிக்கின்ற எதிர்க்கட்சியினர், தற்போதைய சூழ்நிலை இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment