அண்மைக்காலமாக இலங்கையில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் தொடர்ச்சியில் இன்று காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்துக்குள் நான்கு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கல்கமுவ பகதியில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் 67 வயது நபர் ஒருவரும் 16 வயது இளைஞனும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இது குடும்பத்தகராறு எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கம்பஹாவில் திருட்டுச் சம்பவம் ஒன்றின் போது 30 வயது நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் மூதூர் பிரதேசத்தில் 50 வயது நபர் ஒருவர் மது போதையில் இருந்த நபர் ஒருவருடனான தகராறில் உயிரிழந்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment