மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ச மீதான வெளிநாட்டு பிரயாணத் தடை செப்டம்பர் 5ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச போன்று இவர்களும் தப்பியோட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பின்னணியில் பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியாக இருக்கும் போதே நாட்டை விட்டுத் தப்பியோடிய கோட்டாபய தற்போது நாடு விட்டு நாடு நகர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment