பாரிய மக்கள் கூட்டம் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து கோட்டாபயவை வெளியேற்றப் போவதாக உளவுத்துறையே அச்சமூட்டியதாகவும் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 15,000 பேர் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரச உளவுத்துறை அச்சமூட்டியதாகவும், எனினும் அதை விட அதிகமான கூட்டம் சேர்ந்ததாகவும் பாதுகாப்பு துறையினரின் 'பங்கு' குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த - கோட்டா மக்கள் புரட்சியூடாக பதவியிலிருந்து துரத்தப்பட்ட அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டும் தப்பியோடியமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment