ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்வக் கோளாறில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து படங்கள் எடுத்த 'குற்றச்சாட்டின்' பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
தெரனியாகலயைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சட்டவிரோதமாக ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த குற்றச்சாட்டின் பின்னணியில் மேலும் இருவரை பொலிசார் கைது செய்துள்ள அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் படலம் என்பது தவறான தகவல் என ஜனாதிபதி ரணில் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment